இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 27, 31,நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வமான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 27, 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்ரோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
