இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் மேலும் 32 கண்காணிப்பாளர்களை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் மேலும் 32 கண்காணிப்பாளர்களை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம்.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணியில் சகல மாவட்டங்களிலும் குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்கள் 32 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்கா ணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த குறுகிய கால கண்காணிப்பாளர்கள், பிரசாரம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகள், வாக்களிப்பு தினம் மற்றும் வாக்களிப்பு நிலையங் களில் வாக்களிப்பு ஆரம்பம், வாக்குகள் எண்ணப்படுதல் போன்றவற்றிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தலைமை கண் காணிப்பாளர் இன்டா லசே தெரி வித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குறுகிய கால கண்காணிப்பாளர்கள் இரு குழுக்களாக செயல்படுவார்கள். அவர்கள் தங்கள் பணியை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தில் நடை பெறவுள்ள செயல்பாடுகள் தொடர்பில் போதிய விளக்கங்களை பெற்றுள்ளனர்.
26 கண்காணிப்பாளர்களை ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அவர்கள் கடந்த ஓகஸ்ட் 29 முதல் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் தேர்தல் முன்னெடுப்பு மற்றும் பிரசாரப் பணிகளை கண்காணித்தனர் என்றும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
