பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் பிரிட்டன் பொலிஸார் விசாரணை

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என்று வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வீட்டுக்கு சென்றபொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இராஜதந்திர விடுபாட்டு உரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டுக்குள் செல்லவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, முறைப்பாடு செய்த நபர் அவசர கடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
