அமெரிக்க எல்லையில் இருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேர் கைது ஒருவர் உயிரிழந்தார்
5 months ago

அமெரிக்க எல்லையில் இருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் மட்டும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதில் இருந்து தப்பிக்க சிலர் கனடாவுக்குள் நுழைகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் கனடாவின் கடுங்குளிரைத் தாங்குவதற்கான துணிகள் இல்லாமல் பரிதாபமான நிலையில் இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தனிநபர் தகவல்களை வெளியிட முடியாது என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாகக் குடியேரிகள் கனடாவுக்குள் நுழையலாம் என்பதால் அதிகாரிகள் எல்லைகளில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
