தொண்டமனாறு செல்வச் சன்னதி ஆலய தீர்த்த திருவிழாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூக்குக்காவடி எடுத்தமை பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

1 year ago


வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சன்னதி தேவஸ்தான தீர்த்த திருவிழாவான நேற்று (19)  ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரமேஸ் அவர்களின் தூக்குக்காவடி எடுத்தமை பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது

இரும்பு கோடரியினால் ஆன சக்கரம் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று கூரிய வாள்களுக்கு மேல் இருந்தவாறு, முதுகிலும் பக்கவாட்டிலும் 12 வாள்களை ஏற்றி வித்தியாசமான முறையில் தனது நேர்த்திக் கடனை அவர் நிறைவு செய்தார்.

இவரின் காவடியினை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்டம் தாண்டி பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து அதிகமானோர் வருவது குறிப்பிடத்தக்கது..