இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்துக்கும், அங்கு இருந்து இருவர் இலங்கைக்கும் படகு வழியாகப் பயணித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்துக்கும், அங்கு இருந்து இருவர் இலங்கைக்கும் படகு வழியாகப் பயணித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி அவ்வப்போது தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களை கடலோர காவல் குழுமப் பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பயணித்த ஐவரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகம் அகதி முகாமில் இருந்த திருகோணமலையைச் சேர்ந்த இருவர் படகு மூலம் நெடுந்தீவை அடைந்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இருவரும் நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
