யாழ்.நகரில் உள்ள நகைக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த மூவர், 30 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றனர்.
6 months ago

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள நகைக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த மூவர், 30 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஹைஏஸ் வாகனத்தில் வந்த மூவர், தங்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் என்று அடையாளப்படுத்தி கடையைப் பூட்டிவிட்டு கடையில் இருந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதையடுத்தே கடையில் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
