பொருளாதார கொள்கைகளை மாற்றினால் இலங்கை மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை.

பொருளாதார கொள்கைகளை மாற்றினால் இலங்கை மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லவில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'' பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றினால் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் கருதுகின்றது.
நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய பீட்டர் ப்ரூவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததாக கூறினார்.
அரச வருவாயை அதிகரிப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படுகின்றது.
இந்நிலையில் பொருளாதாரம் தொடர்பில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.''என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
