இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்தனர்.-- அனர்த்த பிரிவு தெரிவிப்பு
7 months ago

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
21 மாவட்டங்களின் 175 பிரதேச செயலகப் பிரிவுகளில் 98,635 குடும்பங்களைச் சேர்ந்த 330,894 பேர் சீரற்ற காலநிலையினால் இன்று (28) காலை வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
82 வீடுகள் முழுமையாகவும் 1,465 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
267 பாதுகாப்பான இடங்களில் 8,358 குடும்பங்களைச் சேர்ந்த 26,625 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
