கனடிய எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க எல்லைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடிய எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க எல்லைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓக்டோபர் 2023 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை கனடா-அமெரிக்க எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்பு பிரிவு கூறுகிறது.
அமெரிக்கத் தேர்தலில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த விவாதம் மேலெழுந்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்திற்கு இது ஒரு சவாலாக மாறலாம் என் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒக்டோபர் 2023 முதல் ஜூலை 2024 வரையில் கனடிய எல்லையில் 19,498 புலம்பெயர்ந்தோரை எதிர்கொண்டதாக அமெரிக்க எல்லைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 15,612 பேர், கனடாவின் கியூபெக் மாகாணத்திற்கும் அமெரிக்காவின் நியூயோர்க், வேர்மொன்ட் மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில் எதிர்கொள்ளப்பட்டனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய ஆண்டு, கனடிய அமெரிக்க எல்லையில் 2,238 புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே எதிர்கொண்டனர் என அமெரிக்க எல்லைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா-அமெரிக்க எல்லையில் அதிக எண்ணிக்கையிலான எதிர்கொள்ளப்படும் புலம்பெயர்ந்தவர்கள் இந்திய வம்சாவளியினர் என தெரியவருகிறது.
ஒக்டோபர் 2023 முதல் ஜூலை 2024 வரையில் எதிர் கொள்ளப்பட்ட 19,498 புலம்பெயர்ந்தவர்களில் 9,742 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
ஒழுங்கமைக்கப்பட்ட நாடு கடத்தல் குழுக்கள் மென்மையான கனடிய எல்லைக் குடியேற்ற விதிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
