யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐவர் கைது.
1 year ago


யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றையதினம் (20.08.2024) குறி்த்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், மணல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஐந்து டிப்பர் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அண்மைய நாட்களாக தென்மராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பல டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
