இந்திய சிறையில் உள்ள யாழ்.அனலைதீவு மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்களின் குடும்பங்கள் கோரிக்கை.

1 year ago


சீரற்ற காலநிலையால் கடந்த ஜீன் மாதம் இந்தியாவில்                        கரையொதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட யாழ். அனலைதீவு மீனவர்களை விடுதலை செய் யுமாறு மீனவர்களின் குடும்பத் தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய சிறையில் உள்ள மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகியோரின் மனைவியர் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசாவும் பங்கேற்றார்.