மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கை் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று முன்தினம் நிராகரித்துள்ளார்.
சந்தேக நபர்களான 'கோஸ்தர்' அல்லது 'மொரிஸ்' என அழைக்கப்படும் செல்வராசா கிருபாகரன் மற்றும் ' 'தனுஷ்' என அழைக்கப்படும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் சட்ட பிரதிநிதிகளான சுரங்க பண்டார மற்றும் அசித்த விபுலநாயக்க ஆகியோர் பிணை கோரியிருந்தனர்.
எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிணைக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார்.
சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வழக்கை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி செய்த நீதிபதி, 2025 ஏப்ரல் 28, 29 மற்றும் 30 திகதிகளில் சாட்சியங்களை ஆய்வு செய்யவுள்ளதாவும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
