



500 நாள்களுக்கு பின் சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள் தாய்லாந்து பிரஜைகள்
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட ஐந்து தாய்லாந்து பிரஜைகள் சுமார் 500 நாள்களுக்கு பின்னர் தமது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, இஸ்ரேலில் பண்ணையொன்றில் பணியாற்றி வந்திருந்த இந்த ஐவரும் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 30 ஆம் திகதி இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதற்கமைய, குறித்த தாய்லாந்து பிரஜைகள் ஐவரும் இன்று காலை பேங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
மேற்படி ஐந்து பேரும் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழு மற்றும் அவர்களது உறவினர்களால் வரவேற்கப்பட்டனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
