

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.
பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார்.
நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார்.
விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார்
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார்.
தமிழ் மொழியில் இவருக்கான பதவிப் பிரமாணக் கடிதம் வழங்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்..
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார்.
பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார்
வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார்
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார்
தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார்.
வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார்.
சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார்
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
