ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய 50 மதுபான உரிமங்கள் நிறுத்தியதுடன் மீண்டும் வழங்க அல்லது இரத்து செய்ய மறுபரிசீலனை

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட ஐம்பது மதுபானங்களின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை மீண்டும் வழங்கப்படுவதற்கு அல்லது இரத்து செய்யப்படுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலை முன்னிட்டு அரசியல் தொடர்புகள் மூலம் பல்வேறு மட்டத்தினருக்கு இந்த 50 உரிமங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த உரிமங்களைப் பெற்ற பலர் அவற்றை இரத்து செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மதுபானகங்களின் உரிமம் பெற விரும்புவோருக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளன.
மதுபானங்களை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், இந்த வழிகாட்;டுதல்களின்படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது.
புதிய உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் குடியிருப்பாளர்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளின் அமைவிடங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
