
கனடாவின் தேசியக் கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாள்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக இந்த தேசப்பற்று உந்துதல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைத்துக்கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளார்.
மேலும் பல்வேறு வரி விதிப்புகளை அறிவிக்கப் போவதாக அடிக்கடி மிரட்டி வருகிறார்.
இவ்வாறான ஓர் பின்னணிகளில் தேசிய கொடி விற்பனையில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 25 வீதமான அமெரிக்கா அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களை விடவும் அண்மைய நாட்களில் தேசப்பற்று செயற்பாடுகள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
