
சீனாவின் ஷங்காயை தாக்கியது சூறாவளியால் 4 இலட்சம் பேர் வெளியேற்றம்.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது. இதனைத் தொடர்ந்து கடும் காற்று வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கிருந்து 400,000 இற்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு விமானங்கள். படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் மூன்று நாள் இலை யுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஷங்காய்க்கு தென்மேற்கே 170 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதால் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 180 இற்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
60,000 இற்கும் மேற்பட்ட அவசர உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஷங்காயில் உதவி வழங்கத் தயாராக உள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் தெற்கு ஹைனான் தீவை தாக்கிய யாகி சூறாவளி தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தியது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
