
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று செவ்வாய்க்கிழமை மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
இதன்போது, இந்தப்பெண்இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டினுள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
