
மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று (07) இடம் பெற்றுள்ளது.
முன்னைய அரசின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 80 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளார்.
அதற்கு பொறுப்பாகத் தனது காசோலையை அவர் வழங்கியுள்ளார்.
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் கிடைக்காத நிலையில், குறித்த காசோலையை வங்கியில் வைப்பிட்ட போது அதில் பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பொலிஸாரின் நிதி மோசடி குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
