
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதி பதியைத் தெரிவு செய்யும் பொது தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நேற்றும் இன்றும் இடம்பெற்றது.
தபால் மூல வாக்களிப்புக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரச திணைக்களங்களில் இன்று (5) காலை தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்குகளை செலுத்தி வரு கின்றனர்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிகாலை தொடக்கம் வாக்கு பதிவுகள் மந்த கதியில் இடம் பெற்று வருவதுடன் அரச அதிகாரிகள் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமல் காணப்படும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக் கொள்ளக் கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712,319 ஆகும். தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
