இலங்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபா நட்டம் -- துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிப்பு

இலங்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு கூறினார்.
மத்தள விமான நிலையத்துக்கு வரும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தீர்மானத்தின் ஊடாக 6 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை தரையிறக்க இணங்கியுள்ளன.
மத்தள விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் 100,000 பயணிகள் மாத்திரமே வருகை தருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 200,000 அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 17 கிலோ மீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியும் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை எனவும் ருவான் கொடித்துவக்கு கூறினார்.
விமான நிலையத்தை நவீனமயமாக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
