அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் உட்பட நால்வர் கொலை.14 வயது சிறுவன் கைது.

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 14 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
பரோ கவுண்டியின் வின்டெரில் உள்ள அப்பலச்சீ பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்தில் உள்ள அதிகாரிகள் அந்த சிறுவனை கைதுசெய்துள்ளனர்.
குறிப்பிட்ட சிறுவன் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொள்வது எவ்வாறு என இணையத்தில் தேடியமை தொடர்பில் 2023 இல் எவ்பிஐயினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1900 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையிலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
ஒரிரு நிமிடங்களில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டனர், பாடசாலைக்கு என நியமிக்கப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் அங்கு காணப்பட்டனர் அவர்கள் உடனடியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சிறுவனை எதிர்கொண்டனர் என ஷெரீவ் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் உடனடியாக சரணடைந்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
