
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவரிடமிருந்து நேற்று (30) புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் நேற்று (30) பிற்பகல் 02.15 மணியளவில் கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்குள் வருகை தர முயன்ற போது சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் அணிந்திருந்த பாதணியிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சுமார் 30 ஆண்டு காலமாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
