யாழ்.கச்சதீவு தொடர்பில் இந்திய மத்திய அரசு பிரேரணையை முன்வைத்தால் விவாதிக்க தயார் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு


யாழ்.கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமாயின் கச்சத்தீவு இந்தியாவினால் கையகப்படுத்தப்பட வேண்டும் என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சி இந்த தீர்மானத்தை செயற்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ-
இந்திய அரசியல் கட்சியொன்று இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ள போதிலும், இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிக்கவில்லை.
எனினும், இந்திய மத்திய அரசு அப்படி ஒரு பிரேரணையை முன்வைத்தால், அது குறித்து விவாதிக்கத் தயார்- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
