
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) முற்பகல் 11 மணியளவில் மீளாய்வு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் மீளாய்வு செய்வதற்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராச்ச மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன.
அங்கிருந்த பெண்ணைக் கடந்து சென்ற குருக்களின் கால் பெண்ணின் காலில் பட்டதால் பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருக்கள் மீது கை வைத்ததால் இந்து அமைப்புகள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
