

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நேற்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
மறைந்த தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த அண்ணாமலை சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ் விலும் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்றுக் காலை திரு கோணமலை திருக்கோணேஸ்வரர் ஆல யத்திற்கு விஜயம் செய்த அண்ணாமலை அங்கு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
திருக்கோணேஸ்வரர் ஆலய விஜயம் தொடர்பில் அண்ணாமலை தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில்,
இலங்கையின் முக்கிய பஞ்ச ஈஸ்வர கோயில்களில் ஒன்றாகும். மேலும் ராமாயண யாத்திரைச் சுவடுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர், சுந்தரர் தங்கள் ஸ்தோத்திரங்களில் திருகோயிலை குறிப்பிட்டுள்ளனர்.
சிவபெருமானின் அறிவுறுத்தலின் பேரில் ரிஷி அகஸ்தியரால் கட்டப்பட்ட கோயிலை இராமாயணம், ராமேஸ்வரத்திற்குப் பிறகு பிரம்மஹஸ்தி தோஷத்தி லிருந்து விடுபட இரண்டாம் லிங்கத்தை கட்டியது.
16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகியர் கள் அழிந்ததைத் தூண்டுதலாக, இன்றும் சனாதன தர்மத்திற்கும் இந்து மதத்தின் ஆவிகளுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கிறது கோவில்- என பதிவிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
