தமிழரசுக் கட்சி வழக்கில் எதிராளி மறுமொழியை பதிவு செய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானம் - நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரினதும் மறுமொழியையும் ஒரு நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை முடிவுறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கடந்த தவணையில் எதிராளிகளாகப் பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின், அந்த ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்காகக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார்.
நானும் அப்படிக் கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
