யாழ்ப்பாணத்தில் பதிவற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், 5 வாள்களும் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகர்ப் பகுதியில் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்துச் சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் வாகனப் பதிவு இன்றி பயணித்தமை தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக நபரான நவாலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.

இதற்கமைய மேற்படி சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஐந்து வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
