
இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது என ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சிறீநிவாசன் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்று வாஷிங்டன் சென்றுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
