பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கருப்பின பெண் கெமி படேனாக் தேர்வு

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கருப்பின பெண் கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் பிரித்தானியாவில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள் மீது கெமி படேனாக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், கட்சியின் நற்பெயரை மீட்டெடுத்து 2029 பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பது கெமி படேனாக்கிற்கு பெரும் சவாலான பணியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
