சர்வதேச மாணவர்கள் உட்பட தற் காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் வாழ்வோரின் எண்ணிக் கையைக் கனடா அரசு கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் மீறி, கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனு மதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூ டோவின் அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அளவுக்கு கனடாவில் ஏற்பட்ட வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சர்வதேச மாணவர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக மத்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
ஆனால், கனடாவின் கட்டுப்பாடுகளையும் மீறி, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டத்தில் வழங்கப்பட்ட கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை விட, 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியு ரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கனடா வழங்கிய கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை 165,805, 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கனடா வழங்கிய கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையோ 187,510 என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
