எம்.பிக்களுக்கு வழங்கப்படும் நிதி அபிவிருத்திக்கானது. இந்தப் பணம் நேரடியாக எம்.பிக்களுக்கு வழங்கப்படாது. இதை வைத்து விஷமப் பிரசாரம் - எம்.பி சுமந்திரன் சுட்டிக்காட்டு.

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதி அபிவிருத்திக்கானது. இந்தப் பணம் நேரடியாக எம்.பிக்களுக்கு வழங்கப் படாது. இதை வைத்து விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வரு மாறு,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற் றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத் தப்படுகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி, மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
இதற்கு உதவியாக அந்தந்த மாவட் டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழி வுகள் கோரப்பட்டிருந்தன. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
இந்தப் பணம் மேற்சொன்ன அபிவி ருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர, எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாகக் கொடுக்கப்படவில்லை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
