காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் - கருத்துகளின் மூலமாகக் கோரும் பொறுப்புக்கூறல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், நிலை மாறுகால நீதி நிலவரம் தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை பேரவைக்கு சமர்ப்பித்த அறிக்கையிலேயே இலங்கை தொடர்பில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்ட அவர்களின் கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றுள்ளது.
அத்துடன், இந்த முயற்சிகள் சிவில் சமூக அமைப்புகள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இத்தகைய இருவழி அணுகுமுறையானது கடந்தகால ஆயுத மோதல் மற்றும் வன்முறைகளின் தாக்கங்களை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளது -என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
