இலங்கையின் பசும்பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்காக பசுக்களை வழங்குவதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கையில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிகளவான பாலைப் பெறக்கூடிய பசுக்கள் இல்லாதது இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஒரு பசுவிடமிருந்து இருந்து பெறப்படும் பாலின் அளவு ஒரு நாளைக்கு சுமார் 10 லீற்றர் ஆகும். ஆனால் புதிய விவசாய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பசுவிடமிருந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை60 லீற்றர் வரை பால் பெற முடியும் என்று அமைச்சு கூறுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தா னுடனான பேச்சுவார்த்தையின் படி இந்திய அரசு, சாஹிவால் என்ற வகை பசு மாடுகளையும், பாகிஸ்தான் முரா என்ற வகை எருமை மாடுகளையும் இலங் கைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற பசுக்கள் மற்றும் எருமைகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டுமே காணப்படுகின்றதுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து பசுக்கள் இறக்குமதி செய்யப் பட்டாலும், அந்த திட்டங்கள் தோல்வியடைந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
