
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இலங்கை விமானப் படையால் சமைத்த உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கடந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சவாலான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட பகுதிகளான சேத்துக்குடா, வீச்சுக்கல்முனை மற்றும் கன்னன்குடா ஆகிய பகுதிகளில் வழங்கினர்.
அத்தோடு கடுமையாகப் பாதிக்கப்பட்ட கன்னன்குடாப் பகுதியிலுள்ள பெண்களுக்காக 180 சானிட்டரி பேக்குகள் விநியோகிக்கப்பட்டன.
உலர் உணவு பொதிகளும் கன்னங்குடா பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
அத்தோடு 400 சானிட்டரி பேட்கள் கன்னங்குடா கிராம உத்தியோகத்தரிடம் தகுந்த முறையில் விநியோகம் செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டன.
உலர் உணவுகள் மற்றும் சுகாதாரப் பொதிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் நன்கொடையாளர்களான ஸ்ரீலங்கா அறக்கட்டளை மற்றும் வண. கட்டானே தம்மரக்கித தேரோ ஆகியோரின் ஆதரவின் மூலம் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
