இந்தியாவுக்கான புதிய தூதுவராக திருமதி மகிஷினி கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவுக்கான புதிய தூதுவராக திருமதி மகிஷினி கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் முன்னர் அந்த நாட்டுக்கான துணை தூதுவராக பதவி வகித்தார்.
ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தென்னாப்பிரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி நிமல் சேனாதீர, ஐக்கிய இராச்சியத்துக்கான தூதுவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு எமி ரேட்ஸிற்கான தூதுவராக பேராசிரியர் அருஷா கூரேயும், ஜப்பானுக்கான தூதுவராக பேராசிரியர் நிர்மலா ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதியை பாகிஸ்தானுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
