நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேக நபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றத்தடுப்பு விசேட கடமையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா போதிக்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மேலும் இந்த விசேட நடவடிக்கைக்காக, எட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 30 பொலிஸ்
உத்தியோகத்தர்கள் மற்றும் போதைப்பொருள் கையாள்வதில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
