இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் 03 ஆண்டுகளுக்கு நீடிப்பு

இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் 2021 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஒப்பந்தம் வெற்றிகரமாக நீடிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 10 பில்லியன் சீன யுவான் (சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதி மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை தற்போதைய ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் சார்பாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மேலும், சீன மக்கள் வங்கி சார்பில் அதன் ஆளுநர் பென் கோன் ஷெங் கையெழுத்திட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
