
கொவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பில் கனடிய அரசாங்கம் மாகாணங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய கொவிட் 19 தடுப்பூசிகளை அழித்து விடுமாறு அது அறிவித்துள்ளது.
கனடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. புதிய தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மைய நாள்க ளாக நாட்டில் கொவிட் 19 பெருந் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கழிவு நீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களிலும் பழைய தடுப்பூசிகளை அழித்து விடு மாறு அறிவுறுத்தல் வழங்கப்பட் டுள்ளது.
புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
