
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றுக் காலை 9 மணியளவில் உணவு அருந்திவிட்டு படுத்துறங்கியுள்ளார்.
பின்னர் குறித்த பெண்ணின் தாயார் மதிய உணவுக்காக அவரை எழுப்பியவேளை அசைவற்று காணப்பட்டார்.
இந்நிலையில் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
