தமிழ் மக்களின் போராட்டங்களில் ஒன்றிலாவது ஜே.வி.பி பங்கேற்றுள்ளதா? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
8 months ago

நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டங்களில் ஒன்றிலாவது ஜே.வி.பி பங்கேற்றுள்ளதா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி என்பது உண்மையில் மாற்றம் பெற்ற அமைப்பல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக் கூடிய ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது எனவும் அவர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
