இந்தியாவின் வாரணாசி ரயில் நிலைய வாகன தரிப்பிடத்தில், தீவிபத்தில் 200 வாகனங்கள் தீக்கிரை
7 months ago


இந்தியாவின் வாரணாசி ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
எனினும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்னொழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், ரயில் நிலையத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
