மூன்றாம் காலாண்டில் இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு

1 year ago



மூன்றாம் காலாண்டில் இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

அதன்படி, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து தங்கியிருப்பதால், மொத்த உள்நாட்டுக் கடன் சுமார் 60 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக நிதிஅமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டுக்கான கடன் அறிக்கையின் படி, ஜூன் மாத இறுதியில் 57.4 பில்லியன் டொலராக இருந்த இலங்கையின் உள்நாட்டுக் கடன் 59.9 பில்லியன் அமெரிக்க டொலராக                  உயர்ந்துள்ளது.