பதிவுசெய்யாத போலியான 6 ஆயிரம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள்

பதிவுசெய்யப்படாத போலியான 6 ஆயிரம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்க் களங்களுக்கு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பலர் கடத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நாட்டில் இயங்கிவரும் போலியானதும், சட்டவிரோதமானதுமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இதுவரை 6 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்ததாவது:-
பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் தொடர்பாக தினமும் பலமுறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
அந்த முறைப்பாடுகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் முறைகேடுகளில் ஈடுபடும் முகவர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
உரிய பதிவுகள் இல்லாத முகவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
