கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தமிழர் ஒருவர் அமெரிக்க எல்லைப் பகுதியில் கைது.


120 கிலோ கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தமிழர் ஒருவர் அமெரிக்க எல்லைப் பகுதியில் கைது செய் யப்பட்டுள்ளார்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாது காப்பு விசாரணைகள் பிரிவு அதிகாரிகள் போர்ட் ஹுரோனில் உள்ள ப்ளுா வாட்டர் பாலத்தில் இவர் ஓட்டிச் சென்ற டிரக்கில் இருந்து 266 இறாத்தல் (பவுண்டுகள்) கொக்கைனை கடந்த முதலாம் திகதி மாலை 4.30 மணியளவில் கைப்பற்றிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
42 வயதுடைய ட்ரக் சாரதியான ஜூலி சபேசன் சத்தியசீலன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என செயின்ட் கிளேர் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது
மோப்ப நாய்க் குழு மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் ஆய்வு ஆகியவற்றின் மூலம் அவர் ஓட்டி வந்த டிரெய்லருக்குள் ஒரு பொய்யான சுவருக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கட்டிகள் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன என அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
