2024 ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை குறித்து ஆராயப்படவுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்த எண்ணிக்கை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 0.85 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
எனினும் கடந்த 21ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை இம்முறை தபால் மூலமாக வாக்களித்த அரச ஊழியர்களின் வாக்கு எண்ணிக்கையில் 16508 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிப்புக்கான காரணத்தை, குறித்த ஆய்வின் பின்னர் கண்டறிய முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
