திருகோணமலையில் மக்களின் காணிகளை அவர்களுக்கே கொடுக்க நடவடிக்கை.--அமைச்சர் அருண் ஹேமச்சந்ர தெரிவிப்பு


திருகோணமலையில் மக்களின் காணிகளை அவர்களுக்கே கொடுக்க நடவடிக்கை.--அமைச்சர் அருண் ஹேமச்சந்ர தெரிவிப்பு
பொது மக்களின் காணிகள் அவர்களுக்கே உரித்தானது. அதனை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு என்ற வகையில் வழங்க வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கவே நாம் உழைக்கின்றோம்.
நாடு பூராகவும் உள்ள அரச காணிகள் தொடர்பில், அவற்றை பயன்படுத்துவது தொடர்பில் இருக்கக் கூடிய அனைத்து தடைகளையும் நீக்கி திருகோணமலை உட்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு சீரான காணி வழங்கல் நடைமுறையை ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு நேற்று (24) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்ர கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னரான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (24) மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் வெளிநாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்ர தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகர, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன ரொஷான் பிரிய சஞ்ஞன, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், அரச அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.ரத்னாயக்க மற்றும் அனைத்து மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களதும் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே வேளை 5 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஊடக செய்தியாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றி செய்திகளை சேகரிக்க அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
