


வவுனியாவில் மனைவியை கொலை செய்து தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்.
வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில் குடும்பத்தகராறினால் மனைவியின் வெட்டிய தலையுடன் புளியங்குளம் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்த கணவன்- தனது மனைவியின் கழுத்தை அறுத்து தலையை மோட்டார்சைக்கிளில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.
இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார். ஆசிரியைக்கு வயது குறைந்த இளைஞன் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த விவகாரம் இருவருக்குள்ளும் தீர்க்கப்பட்டு, அண்மைய நாட்களில் சுமுகமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்து கொந்தளித்த கணவன், ஆசிரியையின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.
கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
