இலங்கையில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு தீர்மானம்

இலங்கையில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது வசதிகளை மேம்படுத்தவும், பிற சர்வதேச விமான நிறுவனங்களை நமது விமான நிலையத்திற்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
2028 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் விமானப் பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தயாராவதற்குத் தேவையான வழிமுறைகளை அமைச்சர் வழங்கினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
